மேயருக்கு கொலை மிரட்டல்: காங்கிரஸ் மாவட்ட தலைவர் உள்பட 3 பேர் மீது பாய்ந்த வழக்கு! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவரது கார் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. 

அப்போது மற்றொரு காரில் அங்கு வந்த நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் மாமன்ற உறுப்பினருமான நவீன் குமார் மற்றும் 2 பேர் மேயரின் காரை இடிப்பது போல காரை நிறுத்தியுள்ளனர். 

இதனை பார்த்த மேயரின் தபேதர் ஆத்திரம் அடைந்து தட்டி கேட்டுள்ளார். இதனால் மேயரையும் அவரது தபேதரையும் நவீன் குமார் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

பின்னர் அங்கிருந்து நவீன் குமார் காரில் புறப்பட்ட சென்று விட்டார். இது குறித்து மேயரின் தபேதர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீசார் காங்கிரஸ் மாவட்ட தலைவர் உள்பட 3 பேர் மீது கொலை மிரட்டல், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல் போன்ற 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagercoil mayor Death threat Case against Congress district president


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->