நாகூர் தர்கா நிர்வாகம் || வக்பு வாரியத்துக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


நாகூர் தர்கா நிர்வாகத்தைக் எட்டு பேர் அடங்கிய அறங்காவலர் குழுவிடம் ஒப்படைக்க வேண்டுமென்று, வக்பு வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்கா புகழ் பெற்ற ஒன்று. இந்த நாகூர் தர்காவிற்கு அனைத்து மதத்தினரும் வந்து வணங்கி செல்கின்றனர். இது ஒரு புனிதத் தலமாகவும் கருதப்படுகிறது. 

கடந்த 1946-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மூலமாக நாகூர் தர்கா நிர்வாகத்தைக் கவனிக்க, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் மாவட்ட நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்து கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 4 முதல் 17-ம் தேதி வரை நடந்த 465-வது உருஸ் விழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கக் வேண்டும் என்று, முஹாலி முத்தவல்லி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அவரின் கோரிக்கையை பரிசீலிக்க வக்பு வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து தர்காவின் தற்காலிக நிர்வாகக் குழு சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை செய்த நீதிபதிகள், ‘‘நாகூர் தர்கா நிர்வாகத்தை கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்ட 4 மாத தற்காலிக நிர்வாகக் குழு, 4 ஆண்டுகளாக தொடர்வது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பினர்.

இதற்க்கு தற்காலிக நிர்வாகக் குழு தரப்பில், "நிர்வாகத்தை அறங்காவலர்கள் குழு வசம் ஒப்படைக்கலாம்’’ தெரிவிக்கப்படவே, இதையடுத்து நீதிபதிகள், நாகூர் தர்கா நிர்வாகத்தை 8 பேர் அடங்கிய அறங்காவலர்கள் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, வக்பு வாரியத்துக்கு உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nagur tharka management issue


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->