மாணவிகளின் பாதுகாப்பிற்காக புதிய சிசிடிவி மற்றும் புதிய செக்யூரிட்டி; அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு..!
New CCTV and new security for the safety of the students Anna University orders
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், மாணவிகளின் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், பல்கலைக்கழகத்தில் 140 காவலாளிகள் உள்ள நிலையில், கூடுதலாக 40 காவலாளிகளை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பழுதடைந்த சிசிடிவிகளை உடனடியாக சரி செய்ய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாணவிகள் பாதுகாப்பிற்காக பல்கலைக்கழகத்தில் கூடுதலாக 30 சிசிவிடி கேமிராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
New CCTV and new security for the safety of the students Anna University orders