1000 கோடியை வாரி சுருட்டிய திமுக அமைச்சர்?! IT &  ED ரைடு! தமிழக வரலாற்றில் மாபெரும் ஊழல்? வைரலாகும் கடிதம்!  - Seithipunal
Seithipunal


"தமிழக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பதிவுத்துறையில் ஊழல் நடக்கிறது, பதிவுத் துறையை காப்பாற்ற வேண்டும், திமுக அமைச்சர் மூர்த்தி மற்றும் பிஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குடியரசு தலைவர் முதல் பிரதமர் அலுவலகம் வரை பதிவுத்துறை பணியாளர்கள் அனுப்பிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்த அந்த கடிதத்தின் விவரம் பின்வருமாறு: தமிழக பதிவுத் துறையில் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவில் ஊழல் பெருக்கெடுத்து உள்ளது. தமிழகத்தில் பணியில் இருக்கும் சார் பதிவாளர்கள் அனைவரையும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தனது அதிகாரத்தைக் கொண்டு மிரட்டி ஒவ்வொரு சார்பதிவாளரிடமும் குறைந்தது 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை பணம் வசூலித்து வருகிறார்.

அவ்வாறு அமைச்சர் மூர்த்திக்கு பணம் தராத சார்பதிவாளர்களை பழிவாங்கும் படலம் தொடங்கி இருக்கிறது. தன்னை அனுகி பணியிட மாறுதல் கோரும் நபர்களிடம் 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை லஞ்சம் வாங்கி கொண்டு இருந்த அமைச்சர் மூர்த்தி தற்போது அனைத்து சார்பதிவாளர்களும் தனக்கு கட்டாயம் லஞ்சம் தர வேண்டும் என்று மிரட்ட தொடங்கியுள்ளார்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சர் மூர்த்தி பதிவுத்துறையை சீரமைப்பதாக கூறிக்கொண்டு தமிழகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களை ஆவணப்பதிவின் எண்ணிக்கை மற்றும் வருவாயின் அடிப்படையில் முதல் 100 அலுவலகங்களை அ வகை எனவும்,101 முதல் 301 வரையிலான அலுவலகங்களை ஆ வகை என்றும், 301 முதல் 575 வரையிலான அலுவலகங்களை இ வகை என மூன்று வகையாக பிரித்து மக்களுக்கு சிறந்த சேவை அளிக்கும் பொருட்டு அனைத்து சார்பதிவாளர்களும் மேற்கண்ட மூன்று வகை சார் பதிவாளர் அலுவலகங்களிலும் சுழற்சி முறையில் பணிபுரியும் வண்ணம் அரசாணை வெளியிடுவதாக அப்போது தெரிவித்தார்.

அந்த அரசாணையின் படி ஒரு சார்பதிவாளர் அ வகை அலுவலகத்தில் ஓர் ஆண்டும் ஆ வகை சார் பதிவாளர் அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகளும் இ வகை சார் பதிவாளர் அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளும் சுழற்சி முறையில் பணி புரியும் வண்ணம் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அந்த அரசாணையின் படி எந்த ஒரு சார் பதிவாளருக்கும் பணியிட மாறுதல் எதுவும் வழங்கப்படவே இல்லை.
மாறாக அ வகை சார் பதிவாளர் அலுவலகங்கள் ரூ. 50 லட்சம் ஆ வகை அலுவலகங்கள் ரூ. 40 லட்சம் மற்றும் இ வகை அலுவலகங்கள் ரூ .30 லட்சத்துக்கும் தற்போது அமைச்சர் மூர்த்தியால் ஏலம் விடப்படுகிறது.இவ்வாறு அந்தப் பணியிடங்களை ஏலம் விடுவதற்காகவே சார்பதிவாளர் அலுவலகங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது .

சென்னை மண்டலத்தில் உள்ள பெரும்பாலான சார் பதிவாளர் அலுவலகங்கள் அ வகைப்பாட்டில் வரக்கூடியது. அமைச்சர் மூர்த்திக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத காரணத்தினால் கடந்த ஆண்டில் சென்னை மண்டலத்தில் பணிபுரிந்த அனைத்து சார்பதிவாளர்களும் ஒரே நாளில் சென்னை மண்டலத்தை விட்டு தமிழகத்தின் பல்வேறு மண்டலங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். 

தமிழகத்தின் பல்வேறு மண்டலங்களிலும் இருந்த சார்பதிவாளர்கள் சென்னைக்கு மாற்றப்பட்டனர். அவ்வாறு சென்னைக்கு மாற்றப்பட்ட சார்பதிவாளர்கள் அனைவரிடமும் சென்னையில் நீங்கள் ஓராண்டுக்கு மேல் பணிபுரிந்து வருவதற்கு 50 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்கப்படுகிறது. மேலும் சென்னை மண்டலத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு மண்டலங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்ட சார்பதிவாளர்களுக்கு மீண்டும் சென்னைக்கு பணி மாறுதல் வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 50 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்கப்படுகிறது.அவ்வாறு லஞ்சம் கொடுக்க விரும்பாத சார் செய்யப்பட்டு பழி பதிவாளர்கள் நிர்வாகப் பணிக்கு மாற்றம் வாங்கப்பட்டுள்ளதோடு அவர்கள் பணிபுரிந்த அலுவலகத்தில் சிறப்பு தணிக்கை என்ற பெயரில் அவர்களை பழிவாங்கும் நடவடிக்கையும் துவங்கியுள்ளது.

ஒவ்வொரு சார்பதிவாளரிடமும் பெறப்படும் இவ்வளவு பெரிய லஞ்ச தொகையும் ஓராண்டுக்கு மட்டுமே. ஓராண்டு கழித்து அவர்கள் அளித்த அதே லஞ்ச தொகையினை மீண்டும் அமைச்சர் மூர்த்திக்கு லஞ்சமாக தர வேண்டும். அவ்வாறு லஞ்சம் தர விரும்பாத சார் பதிவாளர்கள் மீது அமைச்சரின் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
ஆட்சிக்கு வந்த புதிதில் பதிவுத்துறையில் பணியாற்றும் உதவியாளர்களுக்கு சார் பதிவாளர் பொறுப்பினை ஒப்படைக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்த அமைச்சர் மூர்த்தி தற்போது சென்னை மண்டலம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் மற்றும் மாவட்ட பதிவாளர் நிலை சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூட 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை தனக்கு லஞ்சம் தருகின்ற உதவியாளர்களை சார்பதிவாளர் பொறுப்பில் நியமித்துள்ளார். அமைச்சருக்கு லஞ்சம் தர மறுத்ததால் ஏற்கனவே அந்த இடத்தில் இருந்த சார் பதிவாளர்கள் அனைவரும் அந்தந்த மண்டல துணைப் பதிவுத்துறை தலைவர்களின் ஆணை மூலமாக பதிவு இல்லாத பணிக்கு மாற்றப்பட்டு தொலைதூரத்தில் நிர்வாகப் பணியில் பணியமர்த்தப்பட்டு பழி வாங்கப்பட்டுள்ளனர்.சென்னையில் உள்ள பல்வேறு முக்கியமான சார் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட பதிவாளர் நிலை சார்பதிவாளர் அலுவலகங்களில் உதவியாளர்களே சார்பதிவாளர் பொறுப்பில் பணியில் உள்ளனர்.

அதோடு மட்டுமல்லாமல் நிர்வாக பணிக்கு மாற்றம் செய்யப்பட்ட சார் பதிவாளர்கள் அனைவரும் கட்டாயம் தனக்கு லஞ்சம் தர வேண்டும் என்று மிரட்டப்படுகின்றனர். அமைச்சரின் இந்த லஞ்ச வசூல் வேட்டைக்கு அமைச்சரின் spl பி ஏ உடையார்சாமி தான் மூல காரணம். இவர்களின் மூலமாகவே அனைத்து சார்பதிவாளர்களையும் மிரட்டி அமைச்சர் மூர்த்தியால் லஞ்சமாக பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு சார்பதிவாளரும் குறைந்தது 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை அமைச்சருக்கு தர வேண்டும். அதுபோக உடையார்சாமிக்கு தனியாக 5 லட்சம் தர வேண்டும். அவ்வாறு லஞ்சம் கொடுக்க விரும்பாத சார்பதிவாளர்கள் பலரும் தொலைதூரத்தில் நிர்வாகப் பணியில் பணியமர்த்தப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளனர்.

அதோடு மட்டுமல்லாமல் அவ்வாறு லஞ்சம் கொடுக்க விரும்பாத சார்பதிவாளர்கள் பணிபுரிந்த மற்றும் தற்போது பணிபுரியும் அலுவலகங்களுக்கு சிறப்பு தணிக்கை என்ற பெயரில் தனக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகளை அனுப்பி தணிக்கை செய்து இல்லாத குறைகளை கண்டுபிடித்ததாக கூறி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மற்றும் பணியிடை நீக்கம் செய்ய போவதாகவும் அமைச்சர் மூர்த்தியால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தை பெஞ்சால் புயல் கடுமையாக தாக்கியுள்ள போதிலும் அந்த நிலையிலும் கடுமையான மழைக்கு இடையில் அமைச்சர் மூர்த்தி அனைத்து மாவட்ட பதிவாளர்களையும் சென்னைக்கு அழைத்து Unofficial ஆக மீட்டிங் போட்டுள்ளார். அதில் அனைத்து மாவட்ட பதிவாளர்களும் தங்களுக்கு கீழே உள்ள அனைத்து சார்பதிவாளர்களிடமும் 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை கண்டிப்பாக பணம் வாங்கித் தந்தே ஆக வேண்டும் என்று மிரட்டியுள்ளார். அவ்வாறு அமைச்சருக்கு லஞ்சம் வாங்கித் தர ஒப்புக் கொள்ளாத மாவட்ட பதிவாளர்களை கடுமையாக திட்டியும் அவர்களை சஸ்பென்ட் செய்யப் போவதாகவும் எச்சரித்து உள்ளார்.

பெண் சார்பதிவாளர்கள் உட்பட அனைத்து சார்பதிவாளர்களும் தனது பங்களாவிற்கு வந்து தன்னை சந்திக்க வேண்டும் என்றும் அவ்வாறு சந்திக்க வராத சார்பதிவாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அந்த மீட்டிங்கில் மிரட்டியுள்ளார். மேலும் லஞ்சம் தராத சார்பதிவாளர்கள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அந்த கூட்டத்தில் மிரட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட பதிவாளர்கள் மற்றும் துணை பதிவு துறை தலைவர்கள் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டாயம் அமைச்சர் லஞ்சமாக வேண்டும் மூர்த்தி தனக்கு என்று தர உத்தரவிட்டுள்ளார்.பதிவுத் துறையில் உள்ள மாவட்ட பதிவாளர்கள் மற்றும் துணை பதிவு துறை தலைவர் ஆகியோர்கள் அமைச்சர் மூர்த்தியாலும் அவர்களின் பி ஏ க்கள் மூலமாகவும் கடுமையாக மிரட்டப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கி பணியமனம் செய்யும் அதிகாரம் பதிவுத்துறை தலைவருக்கே உள்ளது. அமைச்சர் மூர்த்தியின் அராஜக போகிற்கு உடன்பட்டு தற்போதுள்ள பதிவுத்துறை தலைவர் சார் பதிவாளர் பணியிட மாறுதல் ஆணைகளில் கையெழுத்திட வில்லை. அதனால் தனக்கு இணங்கி லஞ்சம் தராத சார் பதிவாளர்கள் அனைவரையும் அந்தந்த மண்டல துணைப் பதிவுத் துறை தலைவர்களை மிரட்டி அவர்கள் மூலமாக இட மாற்றம் செய்து அந்தந்த மண்டலங்களில் தொலைதூரத்தில் உள்ள நிர்வாக பணியில் பணியமர்த்தி பழி வாங்கியுள்ளார்.

பதிவுத்துறை தலைவர் மற்றும் பதிவுத்துறை செயலாளர் அவர்களால் பணி நியமனம் வழங்கப்பட்ட ஆணைகள் கூட அமைச்சரின் மிரட்டலுக்கு பயந்து கீழ் நிலை அதிகாரிகளான துணை பதிவு துறை தலைவர்களின் ஆணை மூலமாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் பணியிடங்களில் பதிவுத்துறை தலைவரால் நியமிக்கப்பட்டு சார் பதிவாளர்களாக பணிபுரிபவர்களின் எண்ணிக்கையை விடவும், அந்தந்த மண்டல துணைப் பதிவுத் துறை தலைவர்களின் ஆணை மூலமாக சார்பதிவாளர் பொறுப்பில் பணிபுரியும் நபர்களின் எண்ணிக்கையே அதிகம். எந்த ஒரு விதிமுறையையும் கடைபிடிக்காமல் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட பதிவாளர்களும் துணைப் பதிவு துறை தலைவர்களும் அமைச்சர் மூர்த்தியின் மிரட்டலுக்கு பயந்து சார்பதிவாளர் பணியிட மாறுதல் ஆணைகளை பிறப்பித்து வருகின்றனர்.

வணிகவரித் தறையில் தனது அமைச்சர் செல்வாக்கை செலுத்த கையாலாகாத அமைச்சர் மூர்த்தி பதிவுத்துறை பணியாளர்களை கொத்தடிமை போல நடத்தி வருகிறார். இவர் பதிவுத்துறையின் அனைத்து நிலை உயரதிகாரிகளையும் கெட்ட வார்த்தைகள் திட்டுவதும் ஒருமையில் பேசுவதும் சர்வ சாதாரணமான ஒன்று. இவை அனைத்தும் பணியாளர்களை மிரட்டி பணம் வசூலிக்கும் நோக்கமே அன்றி வேறொன்றும் இல்லை, பதிவுத்துறை மூலம் பொது மக்களிடம் இருந்து அதிகமான லஞ்சத் தொகையை வசூல் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக அமைச்சர் மூர்த்தியின் செயல்பாடுகள் உள்ளது. பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் இந்த அராஜக போகிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாய் இதன் மூலம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மனை மதிப்பு நிர்ணயிக்க ரியல் எஸ்டேட் ப்ரொமோட்டோர்களிடமிருந்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 2 லட்சம் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி லஞ்சம் பெறுவது வெளிப்படையாக உலகம் அறிந்த விஷயமாகும். மேலும் சார் பதிவாளர் பணியிட மாறுதல் களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அமைச்சர் மூர்த்தி லஞ்சம் பெறுவதும் உலகம் அறிந்த விஷயம் ஆகும். இவைகளின் மூலம் மட்டுமே பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இதுவரையில் குறைந்தபட்சம் ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்து இருப்பார்.

மேற்படி புகார்களின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினால் அதற்குப் பெரியதாக புலனாய்வு எதுவும் தேவையில்லை. தமிழகத்தில் பதிவுத் துறையில் மேலோட்டமாக விசாரித்தாலே மேற்கூறிய அனைத்தும் உண்மை என தெரிய வரும்.

பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் இந்த நடவடிக்கைகள் முதலில் பதிவுத்துறை பணியாளர்களை பாதித்து கடைசியாக பொது மக்களை கடுமையாக பாதிக்கக்கூடிய ஒரு விஷயமாகும். எனவே இது தொடர்பாக பொதுமக்களை காக்குமாறு நடவடிக்கைகளை எடுத்து தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தற்போது பதவியில் உள்ள அமைச்சர் ஒருவரால் இவ்வாறு லஞ்சம் வசூலிக்கப்படுவதன் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க துளியும் வாய்ப்பு இல்லை.

எனவே மத்திய அரசு அமைப்புகளான அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை ஆகியவற்றின் மூலமாக தமிழக பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் அவரின் sp! பி.ஏ உடையார் சாமி மற்றும் அமைச்சரின் செயல்பாடுகளுக்கு உடந்தையாக உள்ள அனைவரின் நடவடிக்கைகளையும் கண்காணித்து அனைவரின் மீதும் PMLA சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இதன் மூலம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister scam TN Govt Staff write to letter PM


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->