கோபத்தின் உச்சத்தை சாட்டையால் அடித்து வெளிப்படுத்தியுள்ளார் - சீமான் பரபரப்பு பேட்டி..! - Seithipunal
Seithipunal


செருப்பு அணிய மாட்டேன் என்றெல்லாம் அண்ணாமலை கூறியதை ஏற்க முடியாது என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பீடு செய்யக்கூடாது. எனக்கும் கோபம் உள்ளது; அதற்காக தன்னைத்தானே சாட்டையில் அடித்துக் கொள்ளக்கூடாது. குற்றவாளியைதான் சாட்டையால் அடிக்க வேண்டும். தனது கோபத்தை சாட்டையால் அடித்து வெளிப்படுத்திய அண்ணாமலையை விமர்சிக்க முடியாது. 

செருப்பு அணிய மாட்டேன் என்று அண்ணாமலை கூறியதை ஏற்க முடியாது. பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவியின் எப்.ஐ.ஆர். மட்டும் எப்படி வெளியானது. அது மிக கொடூரம். காவல்துறை முறையாக செயல்பட்டிருந்தால் நீதிமன்றம் ஏன் கண்டிக்கப் போகிறது. 

குற்றவாளி ஞானசேகரன் செல்போனை ஏரோபிளேன் மோடில் போட்டதை காவல்துறை எப்படி கண்டுபிடித்தது. பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்பதை எப்படி நம்புவது?. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ntk leader seeman speech about annamalai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->