உங்க ஏரியாவுல, உங்க ஆசிரியர்கள், உங்க மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்காங்க! அவலம், அராஜகம்! பாஜக கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அலமேடு அரசு நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தனின் வாகனத்தை நிறுத்தி முற்றுகையிட்டு முறையீடு செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு மாணவிகளின் பெற்றோர் தள்ளப்பட்டிருப்பது பள்ளி கல்வி துறையின் நிர்வாக சீர்கேட்டை உணர்த்துகிறது. மாவட்ட ஆட்சியர் உமாவிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக பாஜகவின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 

இது குறித்த அவரின் செய்தி குறிப்பில், தமிழகம் முழுவதும் இது போன்று பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் போக்கு அதிகரித்து வருவது பள்ளி கல்வித் துறை நிர்வாகத்தின் அலட்சியத்தை, அலங்கோலத்தை, அராஜகத்தை உணர்த்துகிறது.

இந்த பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மட்டுமே உள்ள நிலையில், அக் குழந்தைகளிடம் முறை தவறி நடந்து கொண்டிருக்கின்ற தலைமை ஆசிரியர் மீது பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன்? கடந்த சில வருடங்களுக்கு முன் இதே தலைமை ஆசிரியர் இந்த பள்ளியிலிருந்து வேறு ஒரு ஊருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் இதே பள்ளிக்கு வந்ததன் பின்னணி என்ன? 

இன்று இந்த பள்ளியின் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அமைச்சர் மதிவேந்தனிடம் முறையிட்ட போது குறைந்தபட்ச மனிதத்தன்மை கூட இல்லாமல் தன் காரை விட்டு கூட இறங்காமல் பதிலளித்த அமைச்சரின் ஆணவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

"என் ஏரியாவுக்குள் வந்து, என் இடத்தில் பேசிவிட்டு போன உன்னை சும்மா விட்டு விடுவேனா?" என்று புத்தாக்க பேச்சாளருக்கு சவால் விடுத்து கைது செய்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன் வருவாரா? 

பள்ளிகளில் ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் ஒழுக்கக்கேடாக செயல்படுவது நிர்வாக சீர்கேட்டினால் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த கலாச்சார, சமூக சீர்குலைவுக்கு காரணம் திராவிட மாடல் தான்!

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் செயல்பாடு, நிர்வாகம் அழுகிப் போய் விட்டது. ஆகையால், உடனடியாக அந்த பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுத்து குழந்தைகளை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாராயணன் திருப்பதி வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal government school student abused


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->