நாமக்கல்லில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2 பேருக்கு சிறை தண்டனை! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசி கடத்தி வருவதால், போலீசார் அடிக்கடி இது தொடர்பான சோதனையில் ஈடுபடுகின்றனர். 

அதுபோல, நாமக்கல் மாவட்டத்திலும் ரேஷன் அரிசி கடத்துவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், ரஞ்சித்குமார் மற்றும் பன்னீர் ஆகிய 2 பேரும் ரேஷன் அரிசி கடத்துவதாக தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை விசாரணை நடத்தியதில், அவர்களிடம் இருந்து 1,500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இது தொடர்பான வழக்கு, நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவருக்கும் ஓராண்டு காலம் சிறை தண்டனையும், தலா ரூ.500 அபராதம் என வழக்கு விசாரணையில் தீர்ப்பளிக்கப்பட்டது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

namakkal ration rice imprisonment 2 peoples arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->