தமிழகத்தை அதிரவைத்த சிறுமியின் கொலை! பெரும் வேதனையில் முதல்வர் மு.க ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, சத்திநாயக்கன்பாளையம் கிராமத்தில் கத்தியால் வெட்டப்பட்டு உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், சத்திநாயக்கன்பாளையம் கிராமம், குடித்தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.

சம்பவம் நடந்த கடந்த மாதம் 27 ஆம் தேதி அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் சிறுமி தஸ்மிதா (வயது 10) தங்கராசு மற்றும் முத்துவேல் (வயது 35) ஆகிய மூவரையும் செந்தில்குமார் கத்தியால் வெட்டிய இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவத்தில் தங்கராசு மற்றும் முத்துவேல் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பலத்த காயமடைந்த சிறுமி தஸ்மிதா, சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (22.08.2024) உயிரிழந்தார். இதனையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

இந்நிலையில், சிறுமி தஸ்மிதா உயிரிழப்பு செய்தியறிந்த முதலமைச்சர் முக ஸ்டாலின் மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்து சேலம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திரு. தங்கராசு மற்றும் முத்துவேல் ஆகிய இருவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி தஸ்மிதாவின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், சிறுமியின் பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Sakthinayakkan Palaiyan Child hacked to death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->