தட்டி தூக்கிய பாஜக! அதிர்ச்சியில் திமுக வட்டாரம்!  - Seithipunal
Seithipunal


பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது முதல் அரசியல் ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 

தன்னுடைய ஒவ்வொரு நகர்வையும் கவனமாக எடுத்து வைக்கும் அண்ணாமலை, ஆளும் திமுக மற்றும் எதிர்கட்சியாக உள்ள அதிமுகவை ஓரங்கட்டி, தமிழகத்தில் பாஜகவை முதன்மை இடத்திற்கு கொண்டு வருவதில் முழுமூச்சாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 

உள்ளாட்சித் தேர்தல், நகரமன்ற தேர்தல், அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் என அனைத்திலும் அதிமுக, திமுகவுக்கு போட்டி கொடுக்கும் விதமாக பாஜகவை தொடர்ந்து வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

எவ்வளவு விமர்சனம் வந்தாலும், அத்தனை விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்து வரும் அண்ணாமலை, மாற்று கட்சி நபர்களை பாஜகவில் இணைப்பதற்கு உண்டான ரகசிய வேலைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், இன்று நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பேரூராட்சி 12 வது வார்டு திமுக கவுன்சிலர் ராமச்சந்திரன், அக்கட்சியில் இருந்து விலகி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார். 

மேலும் திமுகவை சேர்ந்த 15 நிர்வாகிகள் பாஜகவில் இணைந்துள்ளனர். கடந்த 10 தேர்தல்களாக திமுக வெற்றிக்கொடி நாட்டி வரும் நிலையில், திமுகவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அக்கட்சியின் கவுன்சிலர் ஒருவர் பாஜகவில் இணைந்திருப்பது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Senthamngalam DMK Counselor joint BJP


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->