நாமக்கல்: தீ மிதித்தபோது 6 மாதக் குழந்தையுடன் தவறி விழுந்த தந்தை – அதிர்ச்சி வீடியோ!
Namakkal Temple Thee mithi Festival Accident Video
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆவரங்காடு அக்னி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில் பரபரப்பு சம்பவம் ஏற்பட்டது.
விழாவின் ஒரு பகுதியாக பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்வில் ஈடுபட்டனர். அப்போது, தந்தை ஒருவர் தனது 6 மாதக் குழந்தையுடன் தீ மிதிக்கும்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.
அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், நல்வாய்ப்பாக இருவரும் நேரடியாக அக்னி குண்டத்தில் விழவில்லை. தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த பகுதிக்கு வெளியே அவர்கள் கீழே விழுந்ததால் உயிர் தப்பினர்.
உடனே அருகில் இருந்த மற்ற பக்தர்கள் விரைந்து அவர்களை எழுப்பி பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குழந்தைக்கும் தந்தைக்கும் எவ்வித ஆபத்தும் இல்லையென்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
English Summary
Namakkal Temple Thee mithi Festival Accident Video