குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்க முகாம்...மனுக்களின் மீது உடனடி தீர்வு!
Name enrolment, name deletion camp Immediate disposal of petitions
செஞ்சி வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், குடும்ப அட்டையில் எழுத்து பிழைத் திருத்தம் மற்றும் குடும்ப அட்டையில் கைபேசி எண் இணைத்தல் போன்ற குடும்ப அட்டை சேவைகள் குறித்து வரப்பெறும் மனுக்களின் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
தமிழ்நாடு மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் அவர்களின் ஆணைப்படியும் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் .மாவட்ட வருவாய் அலுவலர். அவர்களின் அறிவுரைகளின்படியும் செஞ்சி வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்ற மின்னணு குடும்ப அட்டை சேவைகள் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாமில் செஞ்சி வருவாய் வட்டாச்சியர் திரு.ஆர். செல்வகுமார் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
இம்முகாமில் செஞ்சி வட்ட வழங்கல் அலுவலர் குமரன் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் எல். கண்ணன், எஸ். கண்ணன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், குடும்ப அட்டையில் எழுத்து பிழைத் திருத்தம் மற்றும் குடும்ப அட்டையில் கைபேசி எண் இணைத்தல் போன்ற குடும்ப அட்டை சேவைகள் குறித்து வரப்பெறும் மனுக்களின் மீது உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது.
மேலும், முகாமில் பெறப்பட்டு விசாரணை செய்யக்கூடிய நிலையில் உள்ள மனுக்களை தவிர்த்து, மற்ற மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது.
English Summary
Name enrolment, name deletion camp Immediate disposal of petitions