சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்வதில் நாராயணசாமி வல்லவர்...சபாநாயகர் செல்வம் பரபரப்பு குற்றசாட்டு!
Narayanasamy is good at doing illegal things Speaker Selvam accuses Speaker of the scandal
சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்வதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வல்லவர் என சபாநாயகர் செல்வம் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
புதுச்சேரியில் இன்று செய்தியர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர் செல்வம் கூறியதாவது:வேண்டுமென்றே மக்களை திசை திருப்பும் எண்ணத்தோடு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்றைய தினம் அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் அறிவித்துள்ள திட்டங்களுக்கு பயந்துபோய் இதுபோன்ற போராட்டங்களில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஈடுபட்டு வருகிறார்.
சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்வதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வல்லவர்,மத்திய அமைச்சர், முதலமைச்சராக பதவி வகித்த நாராயணசாமி போராட்டம் நடத்தும் போது அதன் உண்மைதான்மையை அறிந்து செயல்பட வேண்டும்.

விதிமுறைகளுக்கு உட்பட்டு ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது, அதிகப்படியான ரெஸ்டோ பார்கள் உள்ளதாக குற்றம் சாட்டும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆட்சி காலத்திலும் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளித்துள்ளார் என சபாநாயகர் செல்வம் குற்றம்சாட்டினார்.
English Summary
Narayanasamy is good at doing illegal things Speaker Selvam accuses Speaker of the scandal