குப்பைத் தொட்டியில் கிடந்த நடராஜர் சிலை - அதிர்ச்சியில் தூய்மை பணியாளர்கள்.!
natarajar statue found in dustbin
குப்பைத் தொட்டியில் கிடந்த நடராஜர் சிலை - அதிர்ச்சியில் தூய்மை பணியாளர்கள்.!
சென்னையைச் சேர்ந்த சூளை ஜெனரல் காலின் சாலையில் உள்ள குப்பை தொட்டியில் நேற்று மாலை தூய்மை பணியாளர்கள் குப்பைகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, குப்பைத் தொட்டியில் இருந்த ஒரு கோனிப்பையை பிரித்து பார்த்ததில் சுமார் 3 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலை இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இந்த சிலை தொடர்பாக துப்பரவு ஆய்வாளர் தேவாதாசுக்கு தகவல் தெரிவித்தனர்.
![](https://img.seithipunal.com/media/natarajar statue 1-adf8w.png)
அதன் பேரில் விரைந்து வந்த அவர் கண்டெடுக்கப்பட்ட நடராஜர் சிலையை வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பாக வேப்பேரி போலீஸார் கண்டெடுக்கப்பட்ட சிலை பழமையானதா? அல்லது ஏதேனும் கோவிலில் இருந்து திருடிய சிலையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த சிலையை குப்பை தொட்டியில் வீசிச் சென்ற நபர் யார்? என்பது குறித்து போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
natarajar statue found in dustbin