சென்னையை நெருங்கும் புயல் - தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.!
national disaster force alert in chennai for rain
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்னைக்கு அருகில் 140 கி.மீ. தூரத்திலும், நாகையிலிருந்து வடகிழக்கே 210 கி.மீ., புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 150 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்தப் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் சென்னையை நெருங்குவதால் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த 11 குழுக்கள் தயாராக உள்ளனர். அதாவது, துணை கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில் தலா 30 வீரர்களை கொண்ட 11 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வருகை தந்துள்ளனர்.
English Summary
national disaster force alert in chennai for rain