தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் இல்லங்களில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை.! - Seithipunal
Seithipunal


நாட்டின் 75வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்திய அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. 

அந்த நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி என்ற நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

 இந்நிலையில் தமிழகத்தில் ஆகஸ்டு 13 முதல் 15 வரையிலான நாட்களில் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்களின் இல்லங்களில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு தேசியக்கொடி வழங்கி அவர்கள் இல்லங்களில் கொடியை ஏற்ற பள்ளிகள் அறிவுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

National flag should be hoisted at the homes of students and teachers in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->