திடீர் திருப்பம்! ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு விசாரணை! சென்னை வந்த தேசிய பட்டியல் ஆணையம்! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து விசாரணை நடத்த தேசிய பட்டியல் ஆணையம் சென்னை வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூலை ஐந்தாம் தேதி தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடத்தை நேற்று முன்தினம் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி தெரிவித்தார். தமிழகத்திலும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும்  சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து விசாரிப்பதற்காக தேசியப் பட்டியல் ஆணையத்தின் மூத்த உறுப்பினர் ராமச்சந்திர டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை தானாக தேசிய பட்டியல் ஆணையமும் கையில் எடுத்துள்ளது.

கொலை நடந்த இடத்தை பார்வை ஈடுகிறார். பின்னர் சம்பவம் நடந்தது பற்றி காரணங்களை பற்றியும் கேட்டு அறிந்து அதனை தொடர்ந்து பிற்பகல் கலெக்டர், கூடுதல் டிஜிபி, போலீஸ் கமிஷன, ஆதி திராவிட நலத்துறை அதிகாரிகள் ஆகியவருடன் பேசுகிறார். அதன் பிறகு வழக்கின் புலன் விசாரணை கொலைக்கான சதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பற்றி ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

National List Commission to probe assassination of Bahujan Samaj Tamil Nadu president Armstrong


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->