சென்னைக்கு வருகிறார் ஜாபர் சாதிக்.. சிக்க போகும் முக்கிய புள்ளிகள்.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் சிக்கிய 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு பாட்டியாலா நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து ஜாபர் சாதிக்கை சென்னை அழைத்து வரும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட நபர் அள்ளித்த தகவலின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நிரந்தமாக நீக்கப்பட்டார்.

 

போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, நேரில் ஆஜராகுமாறு டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 23-ம் தேதி ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் ஒட்டியதோடு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் அவர் ஆஜராகாததை அடுத்து ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளை தனிப்படையினர் தேடி வந்த நிலையில் ஜாபர் சாதிக் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ஜாபர் சாதிக்கை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் டெல்லியில் வைத்து கைது செய்தனர். இந்த வழக்கில் அரசியல் கட்சிகளும், திரைப்படத்துறையை சேர்ந்த பிரபலங்களும், முக்கிய தொழிலதிபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி என்.சி.பி அதிகாரிகள் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கை ஆஜர்படுத்தினர்.

மேலும், இந்த வழக்கில் ஏராளமானோர் சம்பந்தப்பட்டிருப்பதால் ஜாபர் சாதிக்கை போலீஸ் காவலில் விசாரிக்கவும் அனுமதி கோரினர். இதனை விசாரித்த நீதிபதி ஜாபர் சாதிக்கை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். இதனையடுத்து அவரை என்.சி.பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளகாத தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அவரை சென்னை அழைத்து வரவுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NCB planing to jaffar Sadiq shift to Chennai for investigation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->