விபத்தில் உயிருக்கு போராடிய இளைஞர்கள்.! நொடியும் யோசிக்காமல் செயல்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சூரியா, பாலாஜி, கவுதம். இந்த மூவரில் சூரியா செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது இவர்கள் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்வதற்கு முயன்றதில், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்துள்ளனர்.

இந்த விபத்தில், மூன்று இளைஞர்களும் படுகாயம் அடைந்தனர். அந்த நேரம், அந்த வழியாக காரில் வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மூன்று பேரையும் மீட்டு தனது காரில் ஏற்றி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். 

அங்கு மூன்று பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவத்துறை சார்ந்த அமைச்சர் என்பதால், இளைஞர்களுக்குத் தேவையான சிறப்பு சிகிச்சைகளை விரைவாக வழங்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். 

விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய இளைஞர்களை அமைச்சராக இல்லாமல், உதவும் கரங்களை போன்று செயல்பட்டு தனது காரிலே மருத்துவமனைக்கு அழைத்து வந்த அமைச்சர்  மா.சுப்பிரமணியனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai accident three youths admitted hospital minister m subramaniyan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->