சென்னை : தைரியம் இருந்தா தாண்டி போங்கடா... பேருந்தை வழி மறித்து வம்பு செய்யும் காளை மாடு.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாக தமிழகத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த மாடுகளால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு தீவிர நடைபவபடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் மாடுகள் சுற்றி திரிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், நேற்று சென்னையில் உள்ள திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், பெரியார் நகர் முதல் திருவொற்றியூர் சந்தை வரை காளை மாடு ஒன்று பல நாட்களாக சுற்றித்திரிகிறது. 

நெடுஞ்சாலையில் ஆடம்பரமாகவும், திமிராகவும்  நடந்து செல்லும் இந்த காளை மாடு, வேண்டுமென்றே அந்த வழியாக செல்லும் பேருந்துகளை வழி மறித்து நடுரோட்டில் நிற்கும்.

இதைப்பார்த்து அருகில் உள்ள பொதுமக்கள் விரட்ட நினைத்தாலும் இது அங்கிருந்து நகராது. சுமார் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வரை சாலையின் குறுக்கே பேருந்தை வழிமறித்து நிற்கும். 

அதன் பின்னர் தானாகவே அங்கிருந்து விலகி சென்று பேருந்துகளுக்கு வழி விடுகிறது. இவ்வாறு தினமும் பேருந்துகளை வழி மறுத்து வம்பு செய்கிறது. இந்த மாட்டை பற்றி தெரிந்த பேருந்து ஓட்டுனர்கள், பேருந்தை நிறுத்திவிட்டு மாடு நகர்ந்த பின்னர் செல்கின்றனர். 

ஆனால் இந்த மாட்டின் லீலைகள் தெரியாத பேருந்து ஓட்டுனர்கள், பேருந்தை தொடர்ந்து இயக்கினாலோ அல்லது 'ஹாரன்' அடித்தாலோ மாடு கோபம் அடைந்து பேருந்தின் முகப்பு விளக்குகளை தலையால் முட்டி இடித்து சேதமாக்கிவிடுகின்றது. 

பேருந்தின் ஓட்டுநர்களிடம் வம்பு செய்யும் இந்த காளை மாட்டை அப்புறப்படுதுவதற்காக மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றி திரியும் காளை மாட்டை அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai cow blocking the way of bus


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->