நேத்துகூட நாங்க கேட்டோம் சார்.. பாப்பா சரியாகிடும்னு தான் சார் சொன்னாங்க - உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் குமுறல்.!
near chennai fifteen year girl childran died
சென்னையில் உள்ள தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுமி நந்தினி. இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டதன் காரணமாக கடந்த வியாழகிழமை அன்று மண்ணடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
மருத்துவரின் தொடர் சிகிச்சையில் சிறுமியின் வயிற்றில் புண்கள் இருப்பதும் அல்சர் பிரச்சனை இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, பலநாள் சிகிச்சைக்குப் பிறகு நேற்றிரவு சிறுமி நல்ல நிலையில் இருந்ததால் மருத்துவமனையில் உள்ளவர்கள், இன்று வீட்டிற்குச் செல்லலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, இன்று காலை திடீரென சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இந்தச் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபொழுது அதற்கான உரிய காரணத்தைத் தெரிவிக்காததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை சூழ்ந்தனர்.
இதையடுத்து, நேற்று இரவு சிறுமிக்கு மருத்துவமனையில் ஊசி ஒன்றுப் போடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகதான் சிறுமி உயிரிழந்துவிட்டார் என்று கருதி பெற்றோர் மருத்துவமனையை முறையிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு மருத்துவமனை சார்பில், "முறையான சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டது" என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பெற்றோர் தெரிவித்ததாவது, “அம்மா, அப்பா ரெண்டு பேரும் இல்லாமலேயே குழந்தைய எடுத்துட்டு போய்ட்டாங்க சார். உங்களால முடியலனா கூட சொல்லுங்க, நாங்க பாப்பாவ வேற ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போறோம்னு கேட்டோம். நேத்து நைட் கூட அங்க உள்ளவங்க பாப்பா சரியாகிடும்னு தான் சொன்னாங்க.
ஆனால், இன்னைக்கு காலைல ரத்தம் கம்மியா இருந்ததுனால குழந்தை இறந்துடுச்சுனு சொல்றாங்க. குழந்தைய எடுத்துட்டு போய்ட்டாங்க சார்.” என்றுத் தெரிவித்துள்ளனர்.
English Summary
near chennai fifteen year girl childran died