ஒரே நேரத்தில் கணவன் மனைவி உயிரிழப்பு.! கொலையா? தற்கொலையா?  - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள புளியந்தோப்பு சாஸ்திரி நகர் ஆறாவது தெருவில் வசித்து வந்தவர்கள் சக்திவேல் - துலுக்கானம் தம்பதியினர். இவர்கள் இருவரும் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் துப்புரவு பணியாளர்களாக வேலை செய்து வந்தனர். 

இவர்களுக்கு திருமணமாகி பதின்மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லை என்பதனால் மன வருத்தத்தில் இருந்து வந்தனர். இதற்காக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இவர்களது வீடு பூட்டியே கிடந்ததனால், இருவரும் வெளியே சென்றிருக்கலாம் என்று அக்கம் பக்கத்தினர் கருதினர். இதற்கிடையே நேற்று காலை அவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதையறிந்த அக்கம் பக்கத்தினர், புளியந்தோப்பு போலீசுக்கு தகவல் அளித்தனர். 

அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது, சக்திவேல் தூக்கில் தொங்கிய நிலையிலும், துலுக்கானம் கட்டிலில் படுத்த நிலையிலும் பிணமாக கிடந்தனர். அவர்கள் இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆவதால், உடல்கள் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது. 

இதையடுத்து போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

அந்த விசாரணையில் கடந்த 25-ந் தேதி இரவு வீட்டுக்குள் சென்ற கணவன்-மனைவி இருவரும் மீண்டும் வெளியே வரவில்லை என்றும், அன்றே இரவே அவர்கள் இறந்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. 

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கணவன்-மனைவி தகராறில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அந்த விரக்தியில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai husband and wife died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->