வாட்ஸ் அப் ஆர்டர் மூலம் கஞ்சா விற்பனை செய்த வாலிபர்.! கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.!
near chennai man arrested for drugs sale
சென்னை அருகே உள்ள சூளைமேடு லோகநாதன் தெருவில் வாலிபர் ஒருவர் தினமும் இருசக்கர வாகனத்தில் வந்து கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதாக போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி, போலீசார் நேற்று முன்தினம் லோகநாதன் தெருவில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்து கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்தார்.
அங்கு மாறு வேடத்தில் நின்ற போலீசார் ஒருவரிடம் ஒரு பொட்டலம் 50 ரூபாய் என்று தெரிவித்துள்ளார். உடனே அந்த போலீசார் வாலிபரை மடக்கிப்பிடித்து கைது செய்து, அவரிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.
அதன் பின்னர் அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் அதேபகுதியைச் சேர்ந்த யாசர் அராபத் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
அதாவது யாசருக்கு 'வாட்ஸ் அப்' மூலம் கஞ்சா கேட்டு அவருக்கு தகவல் வருகிறது. அதன் படி, அவர் இருசக்கர வாகனத்தில் சென்று கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் அவர் மீது ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.
இதையடுத்து போலீசார் யசரிடம் இருந்த எடை எந்திரம் மற்றும் இருசக்கர வாகனம் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
near chennai man arrested for drugs sale