பெண் குரலில் பேசி ரூ.21 லட்சம் பணமோசடி செய்த நபர் கைது.! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள புழுதிவாக்கத்தில், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் மகன் ரகுராம். இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். 

இந்நிலையில், இவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:- "எனக்கு திருமணம் செய்வதற்காக எனது தந்தை ஆன்லைன் மூலமாக பெண் தேவை என்று விளம்பரம் செய்து வந்தார்.

இந்த விளம்பரத்தைப் பார்த்து, சேலத்தில் இருந்து கல்யாணராமன் என்பவர் எனது தந்தையிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி என்னை பற்றிய தகவல்களை பெற்றுள்ளார்.

அதன் பின்னர் அவருடைய அண்ணன் மகள் ஐஸ்வர்யாவிற்கு என்னை பிடித்திருப்பதாகவும், திருமணம் செய்து கொடுக்க சம்மதம் என்றும் தகவல் அனுப்பினார்.

அந்த தகவலின் படி, திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. இதையடுத்து அவருடைய அண்ணன் மகள் ஐஸ்வர்யா என்னுடன் அடிக்கடி செல்போனில் பேசுவார். நானும் அவர் பேசியதை உண்மை என்று நம்பினேன்.

இதையடுத்து, கடந்த மே மாதம் ஐஸ்வர்யா தனது தாயாருக்கு உடல்நிலை சரி இல்லை என்றும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக பண உதவி வேண்டும், என்று கேட்டார்.

நானும் வருங்கால மனைவி என்ற எண்ணத்தில் உதவி செய்தேன். இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்தி, கொஞ்சம், கொஞ்சமாக ரூ.21 லட்சம் வரை என்னிடமிருந்து வாங்கி விட்டார். 

அதன் பின்னர் ஐஸ்வர்யா தன்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். திடீரென்று கல்யாணராமன் பேச ஆரம்பித்தார். ஐஸ்வர்யாவை பேச சொல்லுங்கள் என்றால்  அவள் பேசமாட்டாள் என்று தெரிவித்தார். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யாவுக்கு உங்களை பிடிக்கவில்லை என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார். 

அப்போது தான் கல்யாணராமன் தனது அண்ணன் மகளை திருமணம் செய்து தருவதாகவும்,  அவரே பெண் குரலில் பேசி, ரூ.21 லட்சம் பண மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, ரூ.21 லட்சம் பணத்தை திருப்பி கேட்ட போது பணத்தை தரமுடியாது என்று என்னை மிரட்டி வருகிறார். இது குறித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, எனக்கு ரூ.21 லட்சம் பணத்தை மீட்டு தரவேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில், கல்யாணராமன் என்ற பெயரும் பொய்யானது என்பது தெரியவந்தது. மேலும், பெண் குரலில் பேசி பண மோசடி செய்தது சேலம் சின்ன திருப்பதி என்ற ஊரைச்சேர்ந்த தாத்தாதிரி என்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து, போலீசார் நேற்று தாத்தாதிரியை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ரகுராமிடம் மோசடி செய்த பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்று விட்டதாக, தாத்தாதிரி தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai man twenty one lakhs money cheating


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->