கோவை : பயத்தில் நான்கு பேரை கத்தியால் குத்திய பாத்திர வியாபாரி கைது.!
near covai man arrested for attack four peoples
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டூரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். பாத்திர வியாபாரம் செய்து வரும் இவர் சம்பவத்தன்று வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்குச் சென்றார்.
அப்போது, சிறுவர்கள் தெருவில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். இதையடுத்து, கோபாலகிருஷ்ணன் வீட்டில் சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்தார். அப்போது சிறுவர்கள் அடித்த பந்து கோபாலகிருஷ்ணன் தட்டில் வந்து விழுந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் செங்கலை எடுத்து சிறுவர்கள் மீது வீசி விரட்டினார்.இந்த சம்பவத்தை சிறுவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதைக்கேட்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நடந்ததை கேட்பதற்காக கோபாலகிருஷ்ணனின் வீட்டிற்கு சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைப்பார்த்த கோபாலகிருஷ்ணனின் மனைவி தனது கணவரை அவர்கள் ஏதாவது செய்து விடுவார்கள் என்று நினைத்து அவரை வீட்டிற்குள் தள்ளி கதவை பூட்டினார். அதன் பின்னர் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையே, கோபாலகிருஷ்ணன் சிறுவர்களை செங்கல் வீசி விரட்டியதற்காக தன் மீது வழக்கு போடுவார்கள் என நினைத்து, சிறுவர்களின் உறவினர்கள் நான்கு பேரையும் கத்தியால் குத்திவிடலாம் என்று முடிவு செய்தார். அதற்காக, வீட்டில் இருந்த கத்தி மற்றும் சுத்தியலை எடுத்து வந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
ஆனால், அதற்குள் அங்கு வந்த போலீசார் கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர். இதையடுத்து, தாக்குதலில் காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் கோபாலகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
near covai man arrested for attack four peoples