கடலூர் அருகே இரும்பு திருடியதை தட்டிக்கேட்ட வடமாநில இளைஞர்கள் மீது தாக்குதல் - 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்றது வருகின்றது. அந்த பகுதியில், மூன்று நபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதைப்பார்த்த, மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஷாம் கோஷ் அவர்களிடம் ஏன் இங்கு நிற்கிறீர்கள்? என்றுக் கேட்டுள்ளார். 

அதற்கு அவர்கள் மூன்று பேரும், நாங்கள் இரும்பு திருடுவதை நீ செல்போனில் புகைப்படம் எடுக்கின்றாயா என்று கேட்டு, கையில் வைத்திருந்த இரும்பு ராடால் ஷாம் கோஷை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அப்போது, ஷாம் கோஷ்யுடன் இருந்த சக பணியாளர்கள், மூன்று பேரை தடுக்க முயன்றனர். 

இதனால், ஆத்திரமடைந்த மூவரில் ஒருவர், செல்போன் மூலம் தன நண்பர்களைத் தொடர்புக் கொண்டு வர வாழைத்தார். இதையடுத்து மேலும், மூன்று நபர்கள் இருசக்கரவாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இவர்கள் ஆறு பேரும் சேர்ந்து மூன்று தொழிலாளர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில், பலத்த காயம் அடைந்த ஷாம் கோஷ் உள்பட மூன்று பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக கடலூர் புதுக்கடை காலனியை சேர்ந்த 4 வாலிபர்களை கைது செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near cuddalore four peoples arrested for north states youths attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->