திண்டுக்கல் : அவசரமாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர்.! தவறி விழுந்து படுகாயமடைந்த அங்கன்வாடி ஊழியர்.!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே வேலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலையரசி. இவர் வெள்ளைக்குட்டு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். 

இந்த நிலையில், கலையரசி நேற்று வழக்கம் போல் நத்தம்- சிங்கம்புணரி செல்லும் அரசு பேருந்தில் வேலைக்குச் சென்றார். அப்போது, ஓட்டுநர் பேருந்தில் உள்ள நடத்துனர் விசில் அடிப்பதற்கு முன்னதாகவே பேருந்தை நகர்த்தியுள்ளார். 

இதனால் கலையரசி பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனால், அவரது தலையில் அடிபட்டு ரத்தம் வந்துள்ளது. மேலும், உடலில் சிராய்ப்பும் ஏற்பட்டுள்ளது. 

இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பெண்ணின் சகோதரர் ராஜரத்தினம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் படி, போலீசார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near dindukal woman injury for driver emergency move govt bus


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->