ஈரோடு : பல ஆண்டுகளுக்குப் பிறகு மண்ணில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட சிவலிங்கம்.!
near erode village peoples found sivalinga in soil
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகே அங்கண கவுண்டன்புதூர் கிராமத்தில் முனுசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சிவலிங்கம் சிலை, புலிக்குத்தி நடுகற்கள் மற்றும் நந்தி சிலைகள் உள்ளிட்டவை மண்ணில் புதைந்த நிலையில் இருப்பதாக, கோயம்புத்தூரைச் சேர்ந்த அரண்பணி அறக்கட்டளைக்குத் தகவல் வந்தது.
அந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற அறக்கட்டளை குழுவினர், கிராம மக்களின் உதவியுடன் மண்ணில் புதைந்து இருந்த சிவலிங்கம் மற்றும் இரண்டு புலிக்குத்தி நடு கற்களையும் தோண்டி எடுத்துள்ளனர்.
அதன் பின்னர் அவற்றை, அங்குள்ள ஒரு மரத்தின் அடியில் பீடம் அமைத்து அதில், சிலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்களின் வழிபாட்டுக்கு கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்த நடுகற்கள் பழங்காலத்தில் கால்நடைகளை வேட்டையாடுவதற்கு வந்த புலிகளுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்தவர்களின் நினைவாக வைக்கப்பட்டிருக்கலாம் என்று அரண்பணி அறக்கட்டளை குழுவினர் தெரிவித்தார்கள்.
English Summary
near erode village peoples found sivalinga in soil