கள்ளக்குறிச்சி || 58 ஊழியர்கள் நீக்கம்.. தமிழக அரசு தீர்வு காண வேண்டும் - வைகோ வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்க விவகாரம் குறித்து தமிழக அரசு தலையிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது,

 'கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு தீர்வு காண வேண்டும். அனுமதி பெறாமல் ஒரே நாளில் 58 பேரை நீக்கியது கண்டனத்திற்குரியது. 

பணியாளர்களின் பணிநிலையில் எந்தவிதமான மாறுதலும் ஏற்படக்கூடாது என தொழிலாளர் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.  ஆனால் அதை மீறி அரசிடம் முன் அனுமதி பெறாமல், சட்டப்படி நோட்டீஸ் அளிக்காமல் திடீரென ஒரே நாளில் 58 சுங்கச்சாவடி ஊழியர்களை நீக்கி இருப்பது கண்டனத்துக்குரியது. 

இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்'  என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kallakurichi 58 toll booth workers remove


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->