கன்னியாகுமரி அருகே மதுபோதையில் தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர் மீட்பு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் சுமார் 60 அடி உயரத்திலிருந்து மதுபோதையில் ஒருவர் தவறி விழுந்ததாக குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் படி, தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு நாற்பது வயதுடைய ஒரு நபர் உடலில் சிறு காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். 

இதையடுத்து, தீயணைப்பு துறையினர் அந்த நபரை மீட்டு மேலே கொண்டு வருவதற்காக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஸ்ட்ரெட்ச்சரில் சுமந்து வந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கீழே விழுந்த அந்த நபர் மருதங்கோடு பகுதியை சேர்ந்த சிங் என்றும் அவர் ரெயில்வே தண்டவாளத்திற்கு மேல் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் மேல் மது போதையில் அமர்ந்து இருந்ததால் தவறி விழுந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kanniyakumari man fell down in railway track


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->