மகனை மது விற்க சொல்லிய தாய்.. வைரலாகும் வீடியோ..!
near krishnagiri son liquor sale mother request
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியை அடுத்துள்ள கவுண்டப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாவித்திரி. கணவனை இழந்து வாழ்ந்து வருகிறார். இவரின் மகன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்.
கணவனை இழந்து வாழ்வதால் அடிப்படை செலவிற்காக இவர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வருகிறார். இதன் காரணமாக சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
கள்ள மதுவிற்பனை தொடர்பாக போலீசார் இவர் மீது அடிக்கடி கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதால் சாவித்திரி பள்ளியில் பயின்று வரும் தனது 12 வயது மகனை மதுவிற்பனையில் ஈடுபடுத்தியுள்ளார்.
இதைதொடர்ந்து சிறுவன் மது விற்பனையில் ஈடுபட்டபோது எடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் தாயும் மகனும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
near krishnagiri son liquor sale mother request