மாமல்லபுரம் || சாலையில் சுற்றும் மாடுகளால் பொதுமக்கள் அவதி.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பூஞ்சேரி, தேவநேரி கிழக்கு கடற்கரை சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, பொதுப்பணித்துறை சாலை, ஐந்துரதம் உள்ளிட்ட சில முக்கிய வீதிகளில் எந்த நேரமும் மாடுகள் வலம் வருகின்றனர். 

இந்த பகுதிகளில் காலை நேரத்தில், மிதிவண்டியில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சாலையில் உலா வரும் மாடுகளால் சிரமம் அடைகின்றனர். அதேபோல், குழந்தைகளை பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் தாய்மார்கள், அச்சத்துடன் வாகனத்தை ஓட்டுகிறார்கள், ஒரு சிலர் விபத்துக்களில் சிக்கியும் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பலமுறை நவடிக்கை எடுப்பதற்கு வலியுறுத்தினார். அதன் பின்னர், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மாடு வளர்ப்போரை அழைத்து எச்சரிகை விடுத்தது.

இருப்பினும், மாமல்லபுரத்தில் உள்ள சாலைகளில் தொடர்ந்து மாடுகள் சுற்றி திரிவதனால் வீதியில் சுற்றும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near mamallapuram cow roaming on the road peoples fear


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->