ஒட்டன்சத்திரம் : இடையகோட்டையில் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டையில் திருவேங்கடநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்தக்கோவிலின் கருவறை சுவற்றில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாண்டியநாட்டின் பண்பாட்டு ஆய்வு மைய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாவது, "நமது வரலாற்றின் பல தடயங்கள் மண்ணில் புதைந்து கிடக்கின்றன என்ற தகவல்களை இன்றைய கீழடி பொருனை தொல்லியல் ஆய்வுகள் மூலம் அறியலாம். 

இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றில் மிகவும் முக்கிய இடமான விருப்பாச்சி பாளையத்தில் நங்காஞ்சி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஜமீன் அரண்மனைக்கு அருகில் இடையகோட்டையில் திருவேங்கடநாத பெருமாள் கோவில் உள்ளது.

சமகால வரலாற்று சிறப்பும், தொன்மையும், பழமையும் நிறைந்த இடமான இடையகோட்டை திருவேங்கடநாத பெருமாள் கோவிலில் கிடைத்த கல்வெட்டில் இருக்கும் எழுத்துக்களை ஆராய்ந்து பார்க்கும்போது 13-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்தது. 

மேலும் இந்தக் கல்வெட்டில், உதகம்பாலன் என்பவர் இந்தக் கோவிலுக்கு நிலைகால் மற்றும் சிற்பங்கள் போன்றவற்றை செய்து கொடுத்துள்ளார் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டில் உள்ள 17 வரிகளில் கடைசி இரண்டு வரிகள் அழிந்த நிலையில் உள்ளன" என்று தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near ottansathiram eight hundrad years old Inscription found in


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->