பென்னாகரம் : துணை மின்நிலையத்தில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட பெண்.!  - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் அருகே மஞ்சநாயக்கனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டாம்பட்டி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராமன். இவரின்  மனைவி சின்னபாப்பா. 

இவர் பென்னாகரம் துணை மின் நிலையத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்காக வந்துள்ளார். அங்கு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, முன்னால் இருந்த ஐன்னல் கம்பியை தொட்டதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச்சம்பவம் பென்னாகரம் துணை மின் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near pennagaram electric shock attack woman in substation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->