பெரம்பலூரில் பரபரப்பு.! பேருந்து நிலையம் அருகே இளைஞர் எரித்து கொலை.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சோளகாட்டில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

அங்கு, போலீசார் எரிந்த நிலையில் கிடந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேதே பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து எரித்து கொலை செய்யப்பட்ட இளைஞர் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near perambalore new bus stand young man kill fire


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->