பெரம்பலூர் : கழிவறைக்கு சென்ற பள்ளி மாணவன் - பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதி.!
near perambalur school student admitted hodpital for snake bit
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நொச்சியம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் மகன் ஆதித்யா. இவர் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் ஆதித்யா நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்கு சென்றுள்ளார்.
அப்போது பாம்பு ஒன்று வழியில் வந்ததை பார்த்து அச்சமடைந்த அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அந்த பாம்பு, ஆதித்யாவின் இடது கையில் கடித்துள்ளது.
இதனால் வலியால் துடித்த ஆதித்யா தானாகவே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.
இதற்கிடையே ஆதித்யாவை பாம்பு கடித்தது குறித்து தகவல் அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவரை பார்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட போலீசாரும், பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் ஆதித்யா மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near perambalur school student admitted hodpital for snake bit