புதுக்கோட்டை : கணவரின் உடலை பார்த்து நொடியில் உயிரிழந்த மனைவி.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் அருகே துவரவல் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் மனைவி வினிதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறின் காரணமாக திருநாவுக்கரசு வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் திருநாவுக்கரசை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு திருநாவுக்கரசரின் உடல் ஊருக்கு கொண்டு வரப்பட்டது. 

அதன் பின்னர் அவரது உடல் ஊர் முச்சந்தியில் இறக்கிவைக்கப்பட்டபோது, அங்கு அவருடைய மனைவி வினிதா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது வினிதா திடீரென மயங்கி விழுந்தார். 

இதைப்பார்த்த உறவினர்கள் வினிதாவை கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். 

கணவரின் உடலை பார்த்த மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near putukottai wife died in after husband body


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->