சேலம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.!
near salem collecter office bjp party demonstration
ஒவ்வொரு வருடமும் தை மாதம் 1 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின் போது மக்கள் அனைவரும் இன்பமாக தங்கள் குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு மற்றும், பணம் உள்ளிட்டவை வழங்கபட்டு வருகிறது.
இந்த பொங்கல் தொகுப்பில், பச்சரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், திராட்சை உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த வருடம் பொங்கல் தொகுப்பில் தேங்காய் மற்றும் கரும்பு உள்ளிட்டவற்றை சேர்த்து வழங்கும் படி, தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சேலத்தில் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, வெல்லம், தேங்காய் போன்றவற்றை சேர்த்து வழங்கக்கோரியும், தமிழக அரசை கண்டித்தும் பாஜக கட்சியின் விவசாய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். அவருடன் மாநில விவசாய அணி செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட விவசாய அணி தலைவர் பூபாலன், மாவட்ட பொதுச்செயலாளர் சரவணன், துணைத்தலைவர் செல்வராஜ், மகளிர் அணி நிர்வாகி சுமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அந்த போராட்டத்தில் அவர்கள் அனைவரும் கையில் கரும்புகளை ஏந்தியவாறும், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, வெல்லம், தேங்காய் வழங்கக்கோரியும், விவசாயிகளை தி.மு.க. அரசு வஞ்சிப்பதாக கூறியும் கோஷங்களை எழுப்பினர். மேலும், விவசாயிகளிடம் கரும்புகளை கொள்முதல் செய்து அவற்றை பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
English Summary
near salem collecter office bjp party demonstration