செங்கல்பட்டில் பரபரப்பு.. புதைத்த சிறுமியின் உடல்.! காணாமல் போன தலைப்பகுதி.! காரணம் என்ன?
near sengalpattu girl children died
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்திரவாடி பகுதியைச் சேர்ந்தவர் பன்னிரண்டு வயது சிறுமி கிருத்திகா. இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருக்கிறார்.
இவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது சேதம் அடைந்து இருந்த மின்கம்பம் முறிந்து சிறுமியின் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுமியை சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், கிருத்திகா சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் தேதி உயிரிழந்தார்.
அதன்பின்பு அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சித்திரவாடி பகுதியிலுள்ள மயானத்தில் புதைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுமி புதைக்கப்பட்ட மயானத்தில் தலைமுடி மற்றும் பூஜைக்கு உபயோகிக்கும் பொருட்கள் மற்றும் சில இதர பொருட்கள் இருந்ததால் இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதன்பின்பு அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுராந்தகம் போலீசார் சிறுமி புதைக்கப்பட்டு இருந்த இடத்தைத் தோண்டி உடலை எடுத்தனர். அப்போது சிறுமியின் உடலில் தலை வெட்டப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, சிறுமியின் உறவினர் தெரிவித்ததாவது, “சிறுமியின் உடல் தோண்டப்பட்டு இருக்கிறது என்று யாரோ ஒருவர் சொல்லியதை அடுத்து, குழந்தையின் பெரியப்பா இங்கு வந்து பார்த்த பொழுது முடி எல்லாம் மேலே இருந்துள்ளது.
இதையடுத்து, நாங்களும், குழந்தையின் பெற்றோரும் இங்கு வந்து பார்த்தோம். அங்கு முடி, டார்ச் லைட், மாஸ்க் போன்ற அனைத்தும் உள்ளது. அதன் பின்னர் அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல்களைக் கொடுத்தோம். பின்னர் உடலை தோண்டி எடுத்துப் பார்த்தால் குழந்தையின் தலை இல்லை” என்றுத் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அமாவாசை என்பதால் மாந்திரீகத்திற்காக யாராவது எடுத்துச் சென்றார்களா? என்றுக் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
near sengalpattu girl children died