பள்ளிகளில் சாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அன்பில் மகேஷ் பேட்டி..! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேசுவரன். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சமூக பள்ளிக்கூட மாணவர்கள் தின்பண்ட பொருட்களை வாங்க சென்றனர். 

அப்போது அவர்களுக்கு பொருட்களை வழங்க மறுத்து திருப்பி அனுப்பிய மகேசுவரன், அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இதுவரை 2பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 5பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், பாஞ்சாகுளத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் பணி நியமனம் செய்யப்பட்டதோடு, அடுத்தடுத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்ததாவது, 

"சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும். பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

பள்ளிகளில் சாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். தென் மாவட்டங்களில் கல்வியறிவை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tenkaasi sheduled students vedio case


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->