நெல்லை : சமைக்க சொல்லி கண்டித்த தாய்.! மகள் எடுத்த விபரீத முடிவு.!  - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழகோடன்குளத்தைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவரின் மகள் கிறிஸ்டில்லா மேரி. இவருக்கு வருகிற 1-ந்தேதி திருமணம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில், கிறிஸ்டில்லா மேரி அடிக்கடி செல்போன் பார்த்துக்கொண்டு வீட்டு வேலை எதுவும் செய்யாமல் இருந்து வந்தார். இதை கவனித்த அவரது தாய் மகள் கிறிஸ்டில்லா மேரியை பார்த்து, "உனக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதற்குள் சமையல் வேலைகளை எல்லாம் கற்றுக்கொள்" என்று கண்டித்துள்ளார். 

இதனால், மன வேதனை அடைந்த கிறிஸ்டில்லா மேரி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வயலுக்கு அடிப்பதற்கு வைத்திருந்த  பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர்கள், மேரியை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tirunelveli young woman sucide for mother scolds


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->