திருப்பூர் : முடியை பிடித்து சண்டை போட்ட முப்பது மாணவிகள் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புது ராமகிருஷ்ணபுரத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், மாணவி ஒருவர் அதே பள்ளியில் பயிலும் மாணவனைக் காதலித்து வந்துள்ளார். அந்த மாணவனுக்கு மற்றொரு மாணவி வாட்ஸ் அப் மூலம் சாட்டிங் செய்துள்ளார்.

இதையறிந்த மாணவனின் காதலி, எப்படி நீ என் காதலனுடன் சாட்டிங் செய்யலாம்? என்று அந்த மாணவியிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, இரு தரப்பினரும் இந்த சிக்கலைப் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். 

அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் இந்த வாக்குவாதம் முற்றிப்போய் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவரை ஒருவர் முடியைப் பிடித்து சண்டை போடும் அளவிற்கு பிரச்னை முற்றிப் போனது. இதைப்பார்த்து ஓடிவந்த பொதுமக்கள் சண்டையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி விரைந்து வந்த தலைமை ஆசிரியர் இருதரப்பு மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பள்ளிமாணவிகள் ஒருவரை ஒருவரது தாக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tirupur school students fight for one boy friend


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->