மாணவர்கள் தேவைப்படும் போது மட்டுமே செல்போன் பயன்படுத்த வேண்டும் - திருப்பூா் மாவட்ட துணை ஆட்சியர்.! - Seithipunal
Seithipunal


திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்களுக்கு புத்தொளிப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதற்கு  கல்லூரியின் முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். 

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருப்பூா் மாவட்டத்தின் துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  இதில் நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆட்சியர் பேசியதாவது:- "பேரிடா் காலங்களில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களின் பங்கு மிகச் சிறப்பாக இருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் மாணவா்கள் முழுமையான அா்ப்பணிப்பு உணா்வுடன் சேவையாற்றும்போது சமுதாயத்தில் மதிக்கப்படுவாா்கள். அதே நேரம், மாணவா்கள் சேவையில் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் படிப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

இன்றுள்ள காலகட்டத்தில் மாணவர்கள் தேவைப்படும்போது மட்டுமே கைப்பேசியைப் பயன்படுத்திவிட்டு மற்ற நேரங்களில் படிப்பில் கவனம் செலுத்தினால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றியடையலாம் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tirupur sikkanna govt college nss students function asst collector speach


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->