திருவள்ளூர் : பார் நடத்த அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் - மேலாளர் உள்பட இருவர் கைது.!
near tiruvallur tasmac manager arrested for bribe
சென்னையில் முகப்பேரில் உள்ள ஸ்ரீதேவி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தானு. இவர் வேப்பம்பட்டு, காக்களூர், மற்றும் திருத்தணி சாலை உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் பார்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போளிவாக்கம் பகுதியில் புதிதாக பார் ஒன்று தொடங்குவதற்கு அனுமதி கேட்டு திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மற்றும் துணை ஆட்சியர் கலைமன்னன் என்பவரிடம் விண்ணப்பித்திருந்தார்.
அப்போது, கலைமன்னன் ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்தால் அனுமதி தருவேன் என்று தெரிவித்துள்ளார். இதனை விரும்பாத தானு, சம்பவம் தொடர்பாக திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் படி, லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை தானுவிடம் கொடுத்து அதனை லஞ்சமாக கொடுக்கும்படி தெரிவித்தனர். அதன் படி, நேற்று மாலை தானு அந்த பணத்தை கலைமன்னனிடம் கொடுப்பதற்கு சென்றார்.
அங்கு, அவர் அந்த பணத்தை ஓட்டுனரிடம் கொடுக்கும்படி தெரிவித்தார். அதன்படி தானு, லஞ்ச பணத்தை ஓட்டுனரிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக டாஸ்மாக் மேலாளர் கலைமன்னன் மற்றும் அவரது ஓட்டுனர் உள்ளிட்ட இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
near tiruvallur tasmac manager arrested for bribe