நீட் விலக்கு சட்டம் குறித்து விவாதிக்க நாளை காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் ..! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு விவகாரத்தில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றைய சட்ட பேரவை கூட்டத்தில் முதல்வர், நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

 இந்நிலையில், இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6-ம் தேதி நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டுவது குறித்து சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார். இதுகுறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி நாளை காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு தெரிவிக்கப்படுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

neet exam all party meet tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->