ஆட்சியர் உடனான பேச்சு வார்த்தை தோல்வி..!! திட்டமிட்டபடி நாளை பேரணி...!! தயாராகும் பரந்தூர் கிராம மக்கள்..!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக திட்டப்பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் உட்பட 4250 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிராக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராம மக்கள் தொடர்ந்து 145 நாட்களாக இரவு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் சட்டப்பேரவையை நோக்கி பேரணி நடத்த அறிவித்திருந்த நிலையில் இரு அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 13 சோதனை சாவடிகளை அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இரவும் பகலமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நில உரிமை மீட்பு பேரணி நடத்தப் போவதாக 13 கிராம மக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை சந்தித்து போராட்ட குழுவினர் மனு அளித்தனர். மேலும் காவல்துறையினரின் அனுமதியும் கேட்டிருந்தனர். 

இதனை அடுத்து போராட்டக் குழுவினருடன் ஆட்சியர் ஆர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் நாளை திட்டமிட்டபடி நில உரிமை மீட்பு பேரணி ஏகனாபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெறும் என போராட்டக் குழு அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை நடைபெறும் போராட்டத்திற்கு 13 கிராம மக்களும் தயாராகி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Negotiations with Collector failed Parandur people getting ready for rally


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->