#BREAKING : நெல்லை பட்டாசு ஆலை ஏற்பட்ட வெடிவிபத்து.. ஒருவர் பலி.! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே அணைக்கரை பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.

இந்த வெடி விபத்தில் அங்கு வேலை பார்த்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் பட்டாசு ஆலை உரிமையாளர் தோட்டத்தின் நடுவில் குடிசை தொழிலாக பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் வெடி விபத்து ஏற்பட்டபோது ஒருவர் மட்டுமே வேலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai crackers factory fired one man death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->