நெல்லை நாங்குநேரியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்! கைதான 4 பள்ளி மாணவர்கள்!  - Seithipunal
Seithipunal


நாங்குநேரி சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி சுவற்றில் சாதி ரீதியாக வாசகங்களை எழுதிய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியிலுள்ள சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாதிய ரீதியான செயல்கள் இருப்பதாக ஏற்கனவே புகார்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், அந்த பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேர் சாதிய ரீதியாக வகுப்பறை சுவற்றில் சில வாசகங்களை எழுதி வைத்துள்ளனர். 

இந்த விவகாரம் குறித்து பள்ளி நிர்வாகம் நாங்குநேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவதூறாக எழுதப்பட்ட வாசகங்களை அழித்த போலீசார், 4 மாணவர்கள் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

மேலும் அவர்கள் 4 போரையும் திருநெல்வேலி சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

முன்னதாக நாங்குநேரியில் பள்ளி மாணவரையும், அவரது தங்கையையும், வீடு புகுந்து சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai Nanguneri Govt School Issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->