#BREAKING || பெரும் துயர சம்பவத்துக்கு திமுக தான் காரணமா? - ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை.!
nellai quarry accident
திருநெல்வேலி மாவட்டம், பொன்னாக்குடி அருகே கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் நேற்று குவாரி பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
நேற்று இரவு கல்குவாரியில் இருந்த பாறை திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 300 அடி ஆழ பள்ளத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கல்குவாரியில் சிக்கிய 6 பேரில் விஜய் மற்றும் முருகன் உள்ளிட்ட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கல்குவாரி விபத்தில் சிக்கி காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நெல்லை கல்குவாரி விபத்து குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், "அதிமுக ஆட்சியில் அடைமதிப்பான்குளம் கல் குவாரி செயல்பட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. திமுக அரசு அந்த கல் குவாரி செயல்பட அனுமதி அளித்ததால் துயர விபத்து நடைபெற்றுள்ளது.
கல் குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தேவையான நிவாரண உதவியை அரசு வழங்க வேண்டும். தடை செய்யப்பட்ட கல் குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும்" என்று அதிமுக தலைமை ஓபிஎஸ், ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளனர்.