ரேஷன் அரிசியில் வண்டு, பூச்சி! அதிர்ச்சி வீடியோ! சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்!
Nellai Ration Shop Viral Video
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையை சேர்ந்த மாரியம்மாள் என்பவர், தமிழக அரசால் ரேஷன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசியில் வண்டுகள், பூச்சிகள் இருப்பதாகவும் இந்த அரிசியை எப்படி பொங்கி சாப்பிடுவது என்று சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட நிலையில், நியாயவிலை கடை பணியாளர் தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், பத்தமடை நியாய விலைக்கடையில் வழங்கப்பட்ட அரிசியில் வண்டு இருந்ததாக தொலைக்காட்சியில் செய்தி வெளியாகியது.
இந்த செய்தி தொடர்பாக பத்தமடை-1 நியாய விலைக் கடையில் இன்று விநியோகம் செய்யப்பட்ட அரிசியில் ஒரு மூடை அரிசியில் மட்டும் வண்டு இருந்ததும், அதை தவறுதலாக ஒரு குடும்ப அட்டைதாரருக்கு மட்டும் விநியோகம் செய்ததும் தெரியவருகிறது.
இதனை தொடர்ந்து மேற்படி குடும்ப அட்டைதாரருக்கு வேறு தரமான அரிசி மாற்றி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தரமற்ற அரிசியை விநியோகம் செய்ததற்காக சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடையின் விற்பனையாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள அனைத்து கிட்டங்கிகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் இருப்பில் உள்ள அரிசியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை கூட்டுறவு சார்பதிவாளர்கள் அடங்கிய குழு அமைத்து மண்டல இணைப்பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
Nellai Ration Shop Viral Video