நான்கு முறை அறுந்து விழுந்த நெல்லையப்பர் தேரின் வடம் ..பக்தர்கள் குமுறல்..! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலியில் மையப் பகுதியில் அமைந்துள்ளது காந்திமதி அம்மன் உடனுறை நெல்லையப்பர் கோவில். சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் நடைபெறும் ஆனித் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. 10 நாட்கள் தொடர்ந்து இந்த திருவிழா நடைபெறும். 

அதிலும் இந்த திருவிழாவின் இறுதியில் நடைபெறும் தேரோட்டம்  நாடு முழுவதும் மிக பிரசித்தி பெற்றது. இந்த நெல்லையப்பர் தேரோட்டத்தை காண திருநெல்வேலி மட்டுமல்லாது, தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் அங்கு வருவதுண்டு.

1505ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்தேர், 450 டன் எடையுடன் 13 அடுக்குகளைக் கொண்டதாக முதலில் உருவாக்கப் பட்டது. அதன் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக 9 அடுக்குகளாக குறைக்கப்பட்டு, தற்போது வெறும் 5 அடுக்குகள் மட்டுமே உள்ளது. 

இந்த ஆண்டு ஆனித் திருவிழா கடந்த ஜூன் 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் நாளான நேற்று முன்தினம் காலை தேரோட்டம் நடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தேரின் வடம் அறுந்து விழுந்தது. இதில் 2 பக்தர்கள் காயமடைந்தனர். 

517 ஆண்டுகளாக நடைபெறும் இந்த தேர் வட நிகழ்ச்சியில் முதல் முறையாக தற்போது தான்  அடுத்தடுத்து 4 முறை தேரின் வடங்கள் அறுந்து விழுந்ததால் தேர் மிக தாமதமாக கோவிலை சென்றடைந்தது. 

அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. எனினும் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை குறித்து பொதுமக்கள் தேர் சக்கரம், வடங்களின் உறுதி தன்மை குறித்து அதிகாரிகள் சோதனை முன்னோட்டம் நடத்தவில்லை என்று  தங்கள் குமுறலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellaiyappar Chariot Rope Cutted 4 times Devotees Questioned


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->